ஊரூர் ஆள்காட் குப்பம் – கற்றல் வெளி | Urrur Alcot Kuppam – Learning Centre

பத்தாம்  கூடல்

அக்டோபர் 28, 2017

புகைப்படக் கலையை அறிய வேண்டி

gayathri

சமர்ப்பணம்:

தன் வீட்டாரால் கைவிடப்பட்ட துயரத்தால் உயிர் நீத்த  ரோக்ஸ்சிக்கு

நன்றி:  காயத்ரி நாயர் , கிளிக்கிங் டுகெதர்,

பிரார்த்தனை:  சிறு வயதில் தன் பெற்றோர்களை பிரிந்து இருக்கும் உடுமன்பரை குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டி

Dedication : To Roxy who passed away in grief as he was abandoned by his family

Thanks Giving : Gayathri Nair,Clicking Together, Chennai Photo Biennale

Prayers : To build a school for children of Udumunparai

It was late evening on Friday, and we had requested if they could do something for children tomorrow. We were asked to get some color pencils and paper the next day. The conversation ended.

On Saturday morning we reached centre by 11 am, not on our usual time. The place was occupied by fishermen discussing about their phones and networks. Gayathri arrived in no time. Sitting on torn tyres, we started discussing about the centre, clicking, and community but still there were no children who turned up. Soon the fishermen observing our plight called out to the children and few came running.
This showed us the sense of trust and hope we have built with community and also reestablished the need to progress in the chosen path.

Gayathri introduced herself to each child. Children also had to introduce themselves in English.
They were asked to write their names both in English and Tamil in a piece of board.
This sadly showcased the confidence and the learning ability they had. A child studying in class VII was not able to write their name with ease in English or Tamil. This opened up to new avenues which further activities should be focused upon. ‘Who knows to take a selfie’ asked Gaythri and all hands flew up in air. This was followed by a drawing exercise, but with a difference.  They had to draw their selfies, sketch themselves, self-portraits!

Children were all excited and started drawing themselves. In no time, it became an imaginary character. The name plates were stuck to individual master pieces.‘ Photo means light and there is a machine inside this, which converts the light into an image of what you see’ explained Gayathri in the most simple way that children could understand. Children were split into pairs, to photograph each other. Later we all clicked together against the turquoise wall.We decided to quiz them and the winner would get cloth bag as a gift.  But we literally ran out of questions and energy. We in the process learnt the art of being patient, with (from) the children.

இதுவரை நடந்த உரையாடல்களில், இது தான் மிக குறைந்த நேர உரையாடலாக இருக்க முடியும். வெள்ளிக்கிழமை கைபேசியில் அழைத்து குப்பத்துக் குழந்தைகளுக்கு நாளை சனிக்கிழமை ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டோம். கண்டிப்பாக வருகிறேன், சில வண்ண பென்சில்கள் மற்றும் காகிதங்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி உரையாடல் முடிந்தது.

சனிக்கிழமை காலை 11 மணிக்கு நாங்கள்  குப்பதுக் கற்றல் வெளி சென்றடைந்தோம். வழக்கமாக மதிய நேரத்தில் சென்று பழக்கப்படுத்தி இருந்ததால் குழந்தைகளைக் காணவில்லை. மீனவர்கள் தங்கள் கைப் பேசிகள் மற்றும் பிணையம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். காயத்ரி வந்தவுடன் அங்கு அமர்ந்து  கற்றல் வெளி மையம், நிழற்படம் எடுக்கும் முறை, மற்றும் சமூகத்தைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். மீனவர்கள் குரல் கொடுத்து சிறுவர் சிறுமியர்களை வரச் செய்தனர். அவர்களது இந்த செயல் நமக்கு மறுபடியும் ஒரு முறை இந்த சமூகத்துடன் நாம் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை மற்றும் அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் முன்னேற வேண்டிய தேவையை மீண்டும் உறுதி செய்தது.

இன்றைய அறிமுகப் படலம் காயத்திரியல் சற்றே வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு குழந்தைக்கும் காயத்ரி தன்னை அறிமுகப்படுத்தினார், பின்னர் அவர்களை ஆங்கிலத்தில் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளச் செய்தார். குழந்தைகள் அறிமுகப் படலம் மிகவும் ஆர்வமிகுதயுடனும் உற்சாக ததும்பல்களுடன் நடந்தேறியது. பின்னர் ஓர் அட்டையில் தங்கள் பெயரை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி மகிழ்ந்தனர்.

அவர்கள் மகிழ்கையில் நாம் அறிந்தது யாதெனில், அவர்கள் கற்றல் திறன் சற்றே பின் தங்கி இருப்பது தான். ஏழாம் வகுப்பில் படிக்கும் ஒரு குழந்தைதமிழிலோ, ஆங்கிலத்திலோ தன் பெயரை எழுதச்  சிரமப்பட்டது. நாம் கவனம் செலுத்த வேண்டிய சில பகுதிகள் நம் கண் முன்னே தெரிந்தது.

“யாருக்கு இங்கு சுயபடம் எடுக்கத் தெரியும்” என்றவுடன் காற்றில் பல கைகள் உயர்ந்தன.  ‘யார் ஒரு சுயபடம் எடுத்துக் கொள்ளத் தயார்  ‘ என்று கேட்டார் காயத்ரி, உடனே அனைத்து கைகளும் மேலே உயர்ந்தது. காயத்ரி அவர்களுக்கு சுயபடம் வரையக் கற்றுக் கொடுத்தார்.

இச்சுயபடத்தை வைத்து மிக எளிய முறையில் நிழற்படம் பற்றிய விளக்கம் அளித்தார். ஒளியினைக் எடுத்துக்காட்டாகக் கொண்டு அவர் கூறியதை குழந்தைகள் உணர்ந்து உற்சாகத்தில் பதிலளித்து மகிழ்ந்து, மகிழ்வித்தனர். ஜோடிகளாகப் பிரிந்து ஒருவர் மற்றவரை புகைப்படம் எடுத்தனர். புகைபடதினூடே கேள்வி கேட்க முனைந்து தோற்றோம் நாம். வழக்கம் போல் நம் நினைவில் வந்தது நமக்கு அதீத பொறுமை தேவை என்பதுதான்.

 


 

ஒன்பதாம் கூடல்

அக்டோபர் 21, 2017

கற்பனை  வளத்துடன் கதை சொல்லும்  திறம் படைத்த சிறுவர்களுடன்.

சமர்ப்பணம்:

அருணோதயம் குழந்தைகளுக்கு

நன்றி:  அறிவரசன் ஐ , தாம்பரம் மக்கள் குழு  தீபா , மோகன்

பிரார்த்தனை: காகிதம் தயாரிக்கும் சலடைகள் வேண்டி

Dedication : Children of Arunodahayam

Thanks Giving : Arivarasn Ai, Deepa ( Thambaram Makkal Kuzhu ) , mohan

Prayers : For rectangular paper making sieve

mud castle

ஊரூர் குப்பம் குடில் மற்ற சனிக்கிழமைகளை போல் இல்லாமல் வெறிச்சோடிக் காட்சி  அளித்தது. தீபாவளி விடுமுறையைச் சமன் செய்யும் பொறுட்டு இவ்வாரச் சனிக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டனர் குழந்தைகள்.

எனினும் “அக்கா நீங்க உக்காருங்க நாங்க போய் பசங்கள கூட்டிட்டு வந்துடுறோம்ன்னு சொல்லிட்டு” விரைந்தோடினர் சாரதியும், விஷ்ணுவும். திரும்பி வந்தவுடன் அவர்கள் கவனம் முழுவதும் நம் பையில் இருக்கும் வண்ண எழுதுகோல்களின் மீதே இருந்தது. வந்திருந்த சிறுவர் சிறுமியர் இரண்டு குழுவினராக பிரிந்து அன்றைய செயல்களில் ஈடுபட்டனர்.

ஒரு குழு சுண்டட்டப் பலகையுடன் ஓர் புறம் அமர, குப்பத்து வாண்டுகள் வண்ணம் தீட்ட விழைதனர். சாரதி, விக்னேஷ், சந்திரசேகர் குழுவாக மோகன் கூறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியானது அருகில் உள்ள பொருட்களைக் கொண்டு வடிவம் அமைத்து அதன் துணைக் கொண்டு ஏதேனும் கதை சொல்ல வேண்டும் என்பதுதான். கூறி முடித்த மறு நொடி கடலை நோக்கி சிட்டாக பறந்தனர் சிறுவர்கள். மற்றொருபுறம் மீன் கோட்டோவியங்கள் மெருகேறி வண்ண மீன்களாக  குழந்தைகள் கை வண்ணத்தால் மாறிக்கொண்டிருந்தன.

அங்கே கதை கூற வேண்டி சிறுவர்கள் நம்மை அழைத்தனர். அழகிய மணல் வீடும், அதன் அருகில் ஒரு நீர் நிலையும் அமைத்து அதில் இறந்த மீன்களை மிதக்க விட்டிருந்தனர்.

  • “ ஏனப்பா இவ்ளோ அழகா வீடு கட்டி இருக்க ஆனா மீன்களை எல்லாம் சாக விட்டுட்டியே???” அப்படின்னு கேட்டவுடன் அவர்கள் கூறியது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
  • “ அக்கா மீன் எல்லாம் பிளாஸ்டிக் சாப்பிட்டுட்டு செத்துடுச்சு……”
  • “ யாருடா இதுக்கெல்லாம் காரணம் “……..
  • “ நாமதான் அக்கா வேற யாரு”……. மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.
  • “ சரி இதுக்கு என்ன பண்ணலாம்”….
  • “ அக்கா நாம நம்மள மாத்திக்குவோம், அப்புறம் மத்தவங்ககிட்ட சொல்லுவோம்”……… வாயடைத்து நின்றோம் நாங்கள்.

மேல் கூறிய பதிலைக் கேட்டவுடன் நமக்கு நினைவிற்கு வந்தது முன் கூறியது போல் நாம் கற்க வேண்டியது எண்ணில் அடங்காதவை என்பது தான்……

எளிதான முறையில் அறிவியல் சோதனைகள் செய்து கற்றுக்கொள்ள மறுநாள் காலை 7.00 மணி அளவில் மீண்டும் கூடுவதாக கூறி விடைபெற்றனர் சிறுவர் சிறுமியர்…..

அக்டோபர் 22, 2017

scienceஅதிகாலை நம்மை வியப்பில் ஆழ்த்தினார் குழந்தைகள். ஆர்வம் மிகுதியுடன்  7.00 மணி அளவில் அந்த குடில் துப்புரவு செய்யபட்டு அறிவியல் சோதனை கூடமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
ஒரு சிறு அறிவியல் கூடத்தைப் பையில் அடக்கி அறிவரசு வந்திறங்கினார். சிறுவர்கள் உடனே “அண்ணா நீங்க எங்க ஸ்கூலுக்கு அன்னிக்கு வந்து மேஜிக் பண்ணுநீன்களே” என்று கூறி குதித்தனர். மிகுந்த நெகிழ்ச்சியுடன் அறிவரசு “பசங்களா அது மேஜிக் இல்ல அறிவியல் டா”…. அப்படின்னு புரிய வைக்க முயற்சித்தார். அறிவியலா????….. என்று கண்கள் விரிய அவரை சுற்றி அமர்ந்தனர் . ஒரு உறிஞ்சுகுழாயில் ஊதல் செய்து அதன் மூலம் ஒலி பயணிக்கும் முறையை மிக எளிய முறையில் அவர் விளக்க உடனடியாகப் புரிந்து கொண்டனர் சிறுவர் சிறுமியர். ஊதல் ஒலி பின்னணி இசையாக அமைய, அடுத்தடுத்து வந்த சிறு சிறு சிந்தனைகளை லாவகமாக எடுத்துரைக்க, ஆர்வத்துடன் புரிந்து கொண்டு பதிலளித்தனர் சிறுவர் சிறுமியர். அறிவியல் சோதனைகள் அனைத்தையும் எளிய முறையில் சிறுவர், சிறுமியர் கொண்டே விலக்கியது அனைவரையும் கவர்ந்து ஆர்வமுரச் செய்தது.

“சித்திரமும் கை பழக்கம் ….செந்தமிழும் நா பழக்கம்……” என்பதைத் தொடர்ந்து நாம்  அறிவரசால் நாம் அறிந்தது “எளிய முறையில் எங்கள் வீட்டிலும் அறிவியல் அறியலாம் “ என்பதுதான்.

—- —– —- —-

Gloomy eyes refused to open. The shores were flocked by people after ‘The Hindu Car Free Sunday’. The centre is already swept and tables arranged neatly for ‘magic’. The lazy clock ticks 07.00 am on Sunday morning. More kids with eyes half closed crawl into the centre. As soon as the bearded ‘magician’ arrives with his wand and bag and to our surprise children recognize him already.

The first trick was to convert a straw into a whistle that can be used in case of emergency. As the sounds of ‘pee-pee’ resonate with waves, more curious on lookers joined us. Then the logic behind the trick was explained and thus became ‘science’.  Next experiment was to convert a glass half filled with water into a musical instrument, explaining the production and transmission of sound.

‘Idrogen Eroxide’ was a new chemical we invented. It is produced when cuteness is overloaded and your tongue cannot take it. There were two hydrogen and one oxygen with two legs,two hnads. Later the hydrogen became egg shell and oxyegen became yolk. Children did role play of different elements to understand reactions at a human scale ( literally ) . This also helped them understand why their boats stayed afloat in sea and and not in lakes. Finally concepts of endothermic and exothermic reactions were explained with a ‘happy fountain’ experiment.

The process of ‘Vaayla vada sudrathu’ was also explained in detail, based on special request.The bearded scientist left us all with lot of questions in our head and with a strong message that we should thoroughly question everything we are told.

Hoping scientists comes back to surprise us with more experiments.

 

science 2

எட்டாம் கூடல்

அக்டோபர் 14 , 2017

குழந்தைகளாக மாற வேண்டி

சமர்ப்பணம்:

நெடுஞ்சாலையில் சிதைந்திருக்கும் நாய்களுக்கும் ,
அவற்றை அப்புறப்படுத்தும் கைகளுக்கும்

நன்றி: கொட்டகையை வாரந்தோறும் சுத்தம் செய்யும் அனிதா மற்றும் நண்பர்களுக்கு

பிரார்த்தனை:  மரபு முறையில் தளம்  அமைக்க வேண்டி

IMG_2919

எங்கோ ஓர் மூலையில் யாரோ மனதாரச் செய்யும் பிரார்த்தனையால் ரித்திக்கா , ஆன்ட்ரியா , ஜெரோம் மற்றும் பிரதீப்பினால் அழகானது ஊரூர் குப்பத்துக் குழந்தைகளின் இவ்வாரக் கூடல். குழந்தைகள் அவர்களுக்குள் வியாபித்திருக்கும் உலகம் மிகவும் அபாரமானது.

இக்கால பருவ மாற்றத்தின் காரணத்தால் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நம்மில் பலர் வண்ணத்துப் பூச்சியின் பெயர் கேட்டவுடன் முகம் மலர சிரிப்பதற்கு அதுவே காரணம். கற்பைனகளும் கனவுகளும் நிறைந்த இவ்வுலகில் அதீத பொறுமையுடன் ரித்திகா மற்றும் ஆன்ட்ரியா குழந்தைகளுக்கு காகிதத்தை கையாளச் சொல்லிக் கொடுத்த விதம் பாராட்டுக்குரியது. வண்ணத்துப் பூச்சிகளை காண கிடைப்பதே அரிதாகி விட்ட இக்காலத்தில், குழந்தைகளின் கை வண்ணத்தால் கடல் காற்றின் இசைக்கேற்ப வண்ணத்துப் பூச்சிகள் கொட்டகையில் வட்டமிட்டன.

கொட்டகையில் இவர்கள் ஒருபுறம் வண்ணங்கள் சேர்த்துக் கொண்டிருக்க மறுபுறம் ஜெரோம் மற்றும் பிரதீப் சிறுவர்களுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர். இருபுறமும் குழந்தைகளையும் அவர்கள் ஈடுபட்டிருந்த செயல்களையும் பார்க்கையில்  நம்மைச் சுற்றி திறமைகளில் நம்பிக்கை ஊற்று இன்றும் வற்றவில்லை என்பதை  உணர முடிந்தது.

உருவத்தில் வளர்ச்சி உடையவர்கள் ஆயினும் உள்ளத்தில் குழந்தைகளே என்பதை நிரூபிக்கும் வகையில் குழந்தைகளோடு ஒன்றி விளையாடினர் ரித்திக்கா , ஆன்ட்ரியா , ஜெரோம் மற்றும் பிரதீப். எல்லோருக்கும் தங்களுடைய குழந்தைப் பருவத்தை மீண்டும் வாழ்ந்து பார்த்துவிட ஆர்வம் தோன்றுமாம் அதன் எதிரொலியே நாம் கண்ட காட்சி. ஆட்டம்,பாட்டம் இல்லாமல் எங்கள் நாள் முடிவுற்றதில்லை. ஒவ்வொருவரும் பச்சைக் குதிரை தாண்டி, ஓட்டப் பந்தயம் ஓடி, மணலில் குட்டிக் கரணம் அடித்து மகிழ்ந்தனர்.

சரி…இன்றைய கூடல் இனிதே முடிவுற்றது, நாம் இவர்களுக்கு என்ன கற்பித்தோம் என்று கடலைப் பார்த்து படியில் அமர்ந்து யோசிக்கையில், நாம் ஒன்றும் கற்பிக்கவில்லை ஆனால் அவர்களிடம் இருந்து வெகுளித்தனம் , ஒற்றுமை , கபடமற்ற மனம் மற்றும் எல்லாவற்றையும் விட நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு கிடைத்த பரிசே அதை முழுமையாக வாழ முனைவோம் என்பதை கற்றோம் என்றுணர்ந்தோம்.

butterfly

 

ஏழாம் கூடல்

அக்டோபர் 07 , 2017

நூலகம் அமைக்க வேண்டி

சமர்ப்பணம்:

குழந்தைகள் பெறப்படாத சந்தோஷம் வேண்டும் உள்ளங்களுக்கு

மதிய நேரத்திலேயே ஊரூர் குப்பத்துக் கற்றல் வெளியை கண்டு பழகிய நம் கண்களுக்கு 07.10.2017 சனிக்கிழமை காலை நேரத்தில் அதே கற்றல் வெளி ஒரு புதிய பரிணாமத்தில் காட்சி அளித்தது. தன்னார்வக் குழுவினர் குழந்தைகள் கூட எதுவாக அவ்விடத்தைச் சுத்தம் செய்தனர். புதிய அக்கா, அண்ணன்களை வரவேற்பதில் குழந்தைகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

“அக்கா எப்போக்கா வெளையாடுவோம் “……… என்ற ராகத்துடன் ஒரு குரல் ஆரம்பிக்க மற்றவர்கள் சேர்ந்து ராகம் பாடினார். முன்னர் கூறியவாறு மனம் ‘பொறுமை’ என்னும் பாடத்தை நினைவு கூர்ந்தது.

“ஓடி விளையாடு பாப்பா” என்று தானே கூறினான் பாரதி…!!! நாங்கள் எப்படி ஓடுகிறோம் பாருங்கள் என்று ஓட்டம் பிடித்தனர் சிறுவர், சிறுமியர். ஓடி களைத்து குடிலில் வந்தமர்த்த பிஞ்சு கைகளில் புத்தகங்களை தவழ செய்தனர் ‘திக்குகள் எட்டும்’ குழுவினர். சிறுவர் சிறுமியர் புத்தகங்களை பெற்றவுடன் முகத்தில் காட்டிய மகிழ்ச்சியும், ஆர்வமும் என்றும் நிலைக்க வேண்டி நம் மனம் விழைந்தது. ஓவியம் வரைதலில் தொடங்கி, கதை, கணிதம், ஆங்கிலம் என பல தலைப்புகளைக் கையில் எடுத்து ஓவ்வொரு அண்ணன் மற்றும் அக்காக்களுடன் குழு குழுவாக ஐக்கியமாகினார் குழந்தைகள்.

சொற்கள் பிடிக்காத கவிஞனும் உண்டோ???

வண்ணம் பிடிக்காத ஓவியனும் உண்டோ???

மழையைப் பிடிக்காத மனிதனும் உண்டோ???

……………………என அடுக்கி கொண்டே போகையில்

பொம்மைகள் பிடிக்காத குழந்தைகளும் உண்டோ ???

என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பொம்மைகளைப் பெற்றுச் சந்தோஷித்தனர் குழந்தைகள்.அவர்கள் கண்களில் ஒளியும், முகத்தில் அளவில்லாச் சிரிப்பும் நிறைந்தது. பொம்மைகளில் ஒன்றாக இருந்த ‘கேரம்’ விளையாட காய்களை சிறுவர்கள் பெறுவதற்காக ஜெகதீஷ் மற்றும் ஷெரிப் கையாண்ட யுக்தி பாராட்டத் தக்கது. திருக்குறள்  மனப்பாடம் செய்து ஒப்புவிக்கவும், ‘Blue Lorry உருண்டு புரண்டது’ ,…..போன்ற சொற்றொடரை திருப்பி திருப்பி வேகமாகக் கூறவும் சிறுவர்களைக் ஊக்குவித்தனர். சிறுவர்களும் விடா முயற்சியில் ஈடுபட்டு அவர்களிடமிருந்து காய்களை பெற்றனர்.

இத்தகைய முயற்சி பற்றி கூறியவுடன் அதற்காக செயல்களை ஒருங்கிணைத்த ஷாஹித் தொடங்கி, அதை செயல்படுத்திய ‘திக்குகள் எட்டும்’ ஜெகதீஷ் மற்றும் குழுவினர் வரை அனைவருக்கும் ஆழ்மனதில் இருந்து நன்றியைச் சமர்ப்பிக்க கடமைப் பட்டிருக்கின்றோம்.

நன்றி: ‘திக்குகள் எட்டும்’

பிரார்த்தனை: மரச்சாமான்

 

workshop

ஆறாம் கூடல்

செப்டம்பர் 30 , 2017

கழிவுகள் சுழற்சி – அறிமுக அமர்வு

சமர்ப்பணம்:

குடும்ப சிக்கல்களுக்கு இடையிலும் மனம் மாறா உள்ளங்களுக்கு…

பிரார்த்தனை: செடி

நன்றி: பிரபு , ஜெயஸ்ரீ ,சரவணன்

‘குழந்தைகள் என்றுமே நமக்கு ஓர் சிறந்த ஆசான்கள்’ என்று கூறின் நம்மில் பெரும்பாலானோர் மாற்று கருத்து தெரிவிக்க மாட்டார்கள். எங்களது இந்த வாரக் கூடலும் அப்படிதான் அமைந்தது. குப்பத்தின் கொட்டகைக்குள் நுழைகையில் ‘அக்கா இன்னிக்கு என்னே சொல்லி கொடுப்பீங்க’……? ‘அந்த அண்ணன் வரலையா’…..?? ‘அக்கா இன்னிக்கு நாங்க கலர் அடிப்போமா ‘….??? என்று எத்தனை எத்தனை கேள்விகள். இதன் மூலம் இவ்விடத்தில்  ‘பொறுமை’ என்னும் பாடம் நமக்கு ஒவ்வொரு வாரமும் கற்பிக்கப்படுகிறது.

வெள்ளை காகிதத்தை கையில் கொடுத்தவுடன் கற்பனை திறன் களைகட்டியது. ‘அக்கா காக்காவுக்கு மூக்கு இருக்கும்ல’……என்பது தொடங்கி , ‘மொடலை (முதலை) பறக்குமா….???? என்பது வரை ஒவ்வொரு கேள்வியுமே ஆச்சரியம் மற்றும் நம் அறிவுக்கு சவாலாகவே அமைந்தது.

சிரி பொன் கோதையின் விரல்கள் செய்தித்தாள்களில் வித்தையுடன் நடனமாட, அதை பின்பற்றி சிறிது நேரத்தில் சிறுவர், சிறுமியர் அவரவர் தலைகளில் ஒரு தொப்பியுடன் நம்மை நோக்கி புன்னகைத்தார். அக்கணம் ‘குரங்கு குல்லா’ கதை நம் கண் முன்னே தோன்றி மறைந்தது……

கடல் மணலில் வீடு கட்டி மகிழ்ந்த அச்சிறுவர்கள் காகிதத்தில் வீடு கட்டி, அதன் காவலுக்கு காகித நாய் பொம்மையும் செய்து உற்சாக கூச்சலிட்டனர். குழந்தைகளுடன் குழந்தையாகி கலை நயம் படைத்தார்  சிரி பொன் கோதை.

வண்ணங்கள் இன்றி அவர்கள் நாள் முழுமை பெறுவதில்லை.சுற்றுப்புறசூழல் விழிப்புணர்வு சார்ந்த அச்சுப் பிரதியில் வண்ணங்கள் தீட்டி , அதில் இருந்த செய்தியையும் படித்து நம்முடன் பகிர்ந்தனர். அன்றைய தினம் அவல் பொரி கடலையை வாயில் அடைத்த படி விடை பெற்றனர் குழந்தைகள்……

நன்றி: சிரி பொன் கோதை

பிரார்த்தனை: கரும்பலகை

ஐந்தாம் கூடல்

செப்டம்பர் 23 , 2017

உணவு சுழற்சி – 2

சமர்ப்பணம்: மாயா மற்றும் தீபக் தம்பதியனரின் நூலக முயற்சிக்கு..

“தும் தா தும்தும் தா , தும் தா தும்தும் தா கைகளால் தாளமிட்டு” மழலை கச்சேரியில் ஆரம்பித்தது  இந்த வாரக்கூடல்.

‘எனக்கு தேன் மிட்டாய் …. எனக்கு ஈ-முட்டை’ என்று புகைப்படங்களுக்கு சுவையூட்டிய விரல்கள், தேன் மிட்டாய் குலாப்ஜாமுனில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது என்பதையும் உறுதி செய்தனர். நாம்அன்றாட பயன்படுத்தும் உணவின் தயாரிப்பு சுழற்சியை அறிவதே தன்னறத்தின் விதை. இதைமைய்யமாகக் கொண்டு குழந்தைகள் அன்றாடம்  விரும்பி உண்ணும் பத்து வித உணவு வகைகளை படமாகச்  சித்தரித்து ஓர் வட்ட சுற்றுதல் விளையாட்டின் மூலம் அவர்களுக்கு காட்டப்பட்டது. ஒவ்வோர் உணவிற்குமான சுழற்சியை படங்களை பார்த்து குழுக்களாக அமர்திருந்த குழந்தைகள்  கதை சொல்லதொடங்கினர். ஆனால் அவர்களின் அளவற்ற  ஆர்வத்திற்கு எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.

‘ அண்ணா… எப்படினா இப்படி பண்ணீங்க ‘ என்று வியந்து வினவிய குழந்தைகளின் விரிந்த கண்கள் மூடவே இல்லை. பிரபுவின் யோகாசனத்தால் அனைவரும் வியப்படைந்து, பின்னர் அவர்களும் ஆர்வமாய் செய்ய தொடங்கினர். எளிய ஆசனங்களும் அவற்றின் தன்மையை பற்றியும் அறிந்தோம். பிறகு பச்சைக் குதிரை விளயாடுவதனால் உண்டாகும் பலனையும் விளையாடி அறிந்தோம்.

‘இந்த பாப்பாவும்   சேத்துக்கோப்பா’ என்று முதன் முதல் கற்றல்வெளிக்கு வருகை தந்த பிஞ்சு விரல்கள் நம்மை வழி நடத்த பிரார்த்திக்கிரோம்.

மூன்றாம் கூடல்

செப்டம்பர் 9 , 2017

சமர்ப்பணம் : காலை  புத்தகமும்  , மாலை  பொட்டலமும்  கடற்கரையில்  சுமக்கும்  பிஞ்சு விரல்களுக்கு 

‘இப்போ…புதுசா ஒரு காக்கா பிறந்திருக்கு … அதுக்கு எப்படி தன் உணவு தெரியும்’ என்ற கார்த்திக்கின் வினாவிற்கு  ‘ அவங்க அம்மா ஊட்டும் ‘ என்று அனைவரையும் குழந்தையாக மாற்றி , இனிதே தொடங்கியது.‘ உணவு தயாரிப்பு சுழற்சி ‘ பற்றிய உரையாடல். நாம் உண்ணும் உணவின் வளர்ப்பு முறையை புரிந்துக் கொள்வதற்கான ஓர் முயற்சி .இதற்காக அரிசி மற்றும் தக்காளியின் வளர்ப்பு முறையை பற்றி அறிய முனைந்தனர் குழந்தைகள். இதன் பொருட்டு அம்முறைகளை பற்றிய புகைப்படங்களை வரிசைப்படுத்தி அடுக்கினர். பின்னர் அவற்றை ஆராய்ந்து புரிந்து கொண்டு நமக்கும் உணர்த்தினர்.

உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு ராஜா கொட்டாவி விட்டார்.
லாவண்யாவின் ‘கொட்டாவி ராஜா ‘ கதை கேட்டு குதூகலித்தனர் குழந்தைகள். விவசாயம் பற்றிய ஓர் குறும்படம் குழந்தைகளுக்கு காட்ட வேண்டி முயல்கையில், வெளிச்சத்தினால் சுவற்றில் படம் தெரியவில்லை. மோனலின் தன்னிச்சையான செயல்பாட்டால் ஓர் அழகிய ‘டயர் கொட்டாய்’ உருவானது. படங்களையும், பாடல்களையும் கண்டு மகிழ்ந்தோம். அது முடித்து வட்டமாக அமர்ந்து விளையாட தொடங்கினோம். ஆடலும் , பாடலும் , திருக்குறளும் , கதையும்  என்ன இல்லை அந்த வட்டத்தில் . இதைத்தான் தனித்திறன் என்கிறார்களோ !!!

ஒளி மங்கும் மாலையில் அவரவர் கண்களில் ஒளியுடன் திரும்பி செல்கையில் விதை பந்துக்களை பகிர்ந்தோம்.

விதைத்தோம்!!

விதைப்போம்!!

பிரார்த்தனை : இசை 

090917

இரண்டாம் கூடல்

IMG_1793.jpg

சமர்ப்பணம் :

‘ஏம்மா..இந்த பாப்பா வா அந்தாண்ட விட்டுறேன்…அங்க என்னமோ பாட்டு பாடுறாங்களாம், கலர் அடிக்குறாங்களாம் …என்னமோ நடக்குதாம்., இதுவும் அங்க இருக்கட்டும்’ என்று தன் பேத்தியை சிங்காரித்து அனுப்பி வைத்த மூதாட்டிக்கு.

நம்மை சுற்றி இயங்கும் உலகம் பெரும்பாலும் நமக்கு நெருக்கமானவர்களை  கொண்டே கணிக்கப்படுகிறது.
“எண்ணிய முடிதல் வேண்டும்  நல்லவே எண்ணல் வேண்டும்”…..பாடினான் பாரதி.

நம் எண்ணங்களை விரிவாக்கி சிறு வட்டத்தினின்று வெளிவந்து மாற்றி யோசித்தோமேயாயின் அகண்ட பிரமாண்டமான உலகில் இப்படியும் சில தருணங்களும் நிகழும் என உணர்வோம். அதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தது செப்டம்பர் 2 ஆம் நாள் 2017.

ஆர்வமிகுந்த மாணவர்களின் தன்னலமில்லா உயர்ந்த எண்ணங்களோடு அயராது உழைப்பில் ஊரூர் மீனவக் குப்பத்தில் உருவான அந்த குடிலில் கால் பதித்தோம். பெயர் தெரியாத அந்த சிறுமியின் கபடமில்லச் சிரிப்பும், ஆர்வம் ததும்பும் அச்சிறுவனின் கண்களும் நம்மை வரவேற்றன. அச்சிறுவர்களும் சிறுமிகளும் நம்முடன் கை கோர்க்க சில மணி துளிகளே தேவை பட்டது. காகித பாம்பில் தொடங்கியது அவர்களது தனித்திறனின் அட்டகாசம். என்ன ஒரு நேர்த்தி, என்ன ஒரு அர்ப்பணிப்பு. கடலலைகள் பின்னணியில் சிறுவர், சிறுமியர் லாவண்யா, மற்றும் சுந்தரி அவர்களோடு கதைகளை படித்த காட்டி மகிழ்ந்து, நம்மையும் மகிழ்வித்தனனர்.

‘சித்திரமும் கை பழக்கம் ‘ என குழந்தைகளுக்கு நிழற்படக் கருவியை கையாள கற்றுத் தந்த பிரபுவின் பேரன்பு குழந்தைகளை குதூகலிக்க செய்தது. பிரேமின் நரம்புக்கலனின் இனிமையான ஓசையுடன் குழந்தைகள் பாடிய பாடல்கள் கடலலைகளை காட்டிலும் சுகமானது அவர்கள் பாட்டு என்றுணர்த்தியது. அந்த அலைகளை காட்டிலும் அழகானவை அவர்கள் கைவண்ணம் என்று நாம் அறிய, அண்ணன் யுவராஜின் செயல்முறை விளக்கத்தை பின்பற்றி உருவாக்கிய வண்ண காகித கொக்குடன் பறந்தன ஊரூர் மீனவக் குப்பத்துச் சிட்டுகள்.

பிரார்த்தனை : விதை

Origamy.jpg

 

முதல் கூடல்

IMG-20170818-WA0000

சமர்ப்பணம் : அருணோதயம் குழந்தைகளுக்காக

இந்த வெளியை அமைக்க காரணமாக இருந்த மாணவர்களே , அன்பின் அடையாளமாய் சித்திரங்களில் வண்ணம் தீட்டும் நிகழ்வை நடத்தினர்.

பிரார்த்தனை : கதை 

‘அவன் நடந்து நடந்து தேய்ந்த பாதையில் தற்சார்பியலை நோக்கிய பயணத்தில் , நாம் இன்னும் அங்கையே தான் நின்று கொண்டு இருக்கிறோம்.’

அவன் காந்தி .

கல்வி என்பது ஓர் சமூக மக்களுக்கு மட்டுமே உரிய ஒன்றாக மாறி நிற்கின்றது. அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் விகுதம் குறைவாகவே உள்ளது. அதற்கு பல காரணங்கள்  சுட்டிக் காட்டப்படுகிறது. அதிலும் ஜாதி என்ற நஞ்சு கலந்துள்ளது. இந்த ஒரு     கணத்தில் அனைவருக்கும் சமமான கல்வி என்பது காகிதப் பேச்சு மட்டுமே. நடைமுறையில் நம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவில் குழந்தைகளுடன் , ஏதோ  ஓர்  திறனில் பயணித்தால் மட்டுமே மாற்றம் என்பது சாத்தியம். சத்தியம் .

இந்த மாற்றத்திற்கு தூண்டுதலாக , பய(பி)ன்படுத்தப்பட்ட சமூகத்தினரின் குழந்தைகளுக்காக, அவர்கள் வசிக்கும் இடத்திலேயே, அவர்களின் உழைப்பால் ‘கற்றல் வெளி’ தொடங்குவதற்கான  ஓர் முயற்ச்சி. இந்த வெளி யாருடையதும் இல்லை , அனைவருக்கும் பொது. குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பயணிக்கும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த முயற்ச்சியின் விதையாக சென்னை பெசென்ட் நகரின்  கடலோரம் அமைந்துள்ளது ‘ உரூர் ஆல்காட் கற்றல் வெளி’. கட்டிடக் கலை மாணவர்களின் முயற்ச்சியால் , எண்ணற்ற உயிர்களின் பிரார்த்தனையாலும் ஆரம்பம் ஆகி உள்ளது.

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top