சில வருடங்கள் முன்பு ஊரே ஒருவனை நிராகரித்தது.
அதே ஊர் இப்பொழுது நிராகரிக்கப்படுகிறது.
இரண்டிற்கும் சாட்சியாய் நிற்பது காலம் மட்டுமே.
அவன் பாரதி. அவள் திருவல்லிக்கேணி.
ஓர் ஊரின் வரலாற்றுத் தன்மை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அனைத்து ஊர் மக்களின் வாய்வழி வாழ்வியல் கதைகளே அந்த ஊரின் தன்மையின் அடையாளம். ஆனால் ஓர் வித வாழ்வியலை மட்டுமே கொண்டாடக் கூடிய ஒன்றாக மாறி நிற்கின்றது நம் வரலாறு. இவ்வித பொருள்மய ஆக்கத்தை தகர்த்து,ஊரைப் பற்றி அவ்வூர் மக்களின் வாய் வழியே தெரிந்துக் கொள்வதர்கான ஓர் முயற்சி.
இரவெல்லாம் தூவானம். அன்று காலை ஆவணி மாத முதல் முகர்த நாள். சிவப்பு,மஞ்சள்,நீளம், பச்சை –ஒரு மணி நேரத்திற்குள் நடந்த நான்கு திருமணங்களின் பட்டு புடவை நிறம். இவை அனைத்தும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் தேர் முன் நின்று மண்டபத்தில் கண்ட அன்பின் வெளிப்பாடுகள். அத்தேரில் இருந்து தொடங்கியது ‘ஊர் உலா உறவு’.
இந்த நிகழ்வு நிகழ எங்களுடன் இணைந்த
‘எக்க்ஷ்ப்ளோர் டிப்பிரென்ட்லி’ மற்றும் ‘நம் வீடு நம் ஊர் நம் கதை’.
People | Place | Pattern – Triplicane
‘Heritage’ – the sound of the very term has been made associative to usually the elitist and the intellectuals. This has lead to alienation of the local community and museumisation of values associated with the place. In an attempt to break away from this perception the first ula was held in Triplicane. As the brides in colorful saris lined the entrance of Triplicane Parthasarathy temple, the participants gathered near the Temple Chariot.
Drizzles of previous night did not hinder the spirit of participants or the volunteers. The task is to decipher the clue given to team with the help of local people, reach the spot and get the next clue from volunteers there. Each team of three consisted atleast one child who was differently abled. The task ends with teams collecting all the clues from different places and reaching the start. The event was hosted along with ‘ Nam veedu Nam oor Nam kadhai ’ and was made inclusive with the support from ‘Explore Differently’
