கட்டிடக்கலை எனும் சாக்கு

“….இலட்சியவாதம் என்பது வேறு …

 இலட்சியவாதம் என்பது , முதல் விஷயம் …உங்களுடைய பங்களிப்பை நேர்மறையான உள்ளத்துடன் செய்வதுதான்…அது உங்களுக்குத் தெரியாது…நீங்கச் செய்யக்கூடிய பங்களிப்பு என்ன என்பது உங்களுக்குத் தெரியாது..நீங்கள் செய்வதற்கான விளைவைக் கண்கள் பார்க்கவே முடியாது…நீ இன்றைக்குப் பண்ணக்கூடிய சின்ன விஷயம் ஐம்பது ஆண்டுகள் பிறகு பிரம்மாண்டமான விஷயமாய் மாறி இருக்கலாம் …நீ இன்றைக்குச் செய்யக்கூடிய பெரிய விஷயம் எந்த விளைவுகளையும் உருவாக்காமல் போகலாம்…நீங்கச் செத்துப்போன பிறகு ஒருத்தன் வந்து …இல்லை இங்க ஒரு விஷயம் பண்ணப்பற்றுக்கு , அதனால் தான் இது நடந்ததென்று சொல்லலாம்….உங்களுக்கு எப்படித் தெரியும்.. உடனடியாக அங்கிருந்து எதிர்வினை வருதுனு எப்படித் தெரியும்… அப்ப நீங்கச் செய்யக்கூடிய ஒன்று தான் ….நீங்கச் செய்யக் கூடியது இலட்சியவாத அடிப்படையில், நம்பிக்கையுடன் நேர்மறை உணர்வுடன், உங்களுடைய பங்களிப்பை ஆற்றுவது  மட்டும் தான் இலட்சியவாதமா இருக்க முடியும்…”

– ஜெ 

இந்தியாவின் பெரிய கல்லூரியில் ஐந்து வருடம் கட்டிடக்கலை படித்துவிட்டு,

ஒரு பெரும் நிறுவனம் வேலை கொடுத்தும், அந்த வாய்ப்பை மறுத்து விட்டு….

சமகாலத்தின் இன்றியமையாத தேவையான குடி நீருக்காக, தான் கற்ற  கல்வியைப்  பயன்படுத்தும் ஓர் வாய்ப்பாய் அமைத்துக்கொண்டு, தொடர்ந்து கிராம மக்களுக்காகத் தான் நம்பும் அறத்திற்காகத் தன்னையே ஒப்படைத்துக்கொண்டவள் தான்  மஞ்சரி.  

இன்று  காலை, இந்தியாவின் முன்னணி கட்டிடக் கலைஞரான ‘அஜித் ராவ்’ விடம் இருந்து ஓர் குறுஞ் செய்தி வந்தது.…” நான் இதில் சில வருடங்களாகத்  தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன்…முக்கியமாகக்  கடந்த ஒரு வருட காலம் முழுக்க இதைத்  தான் செய்து கொண்டு இருக்கிறேன்….கல்வி என்பது சுயத்தை அறிவதற்கான ஒரு கருவி… ஆசிரியர் மாணவன் இருவருக்குமே…. நீங்கள் எதைச் செய்கிறீர்கள் என்பதை விட….எதற்காக, எந்த நேர்த்தியுடன் செய்கிறீர்கள் என்பதே முக்கியம்…..அதற்குக்  கட்டிடக்கலை படிப்பு என்பது ஓர் சாக்கு (Architecture  is  an Exscuse) “

உலகின் மிகச்சிறந்த கட்டிடக்கலை அமைப்புகளில் அகமதாபாத்தில் உள்ள

CEPT பல்கலைக்கழகமும் ஒன்று. அந்தக் கல்லூரியில், அஜித் ராவ் சொல்வது போல ‘சுய கல்வியை’ நோக்கிய பயிற்சியைத் தான் கடந்த அறுபது ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. அங்கு நடந்த ஓர் ஆய்வின்படி, அங்கிருந்து ‘கட்டிடக்கலை’ பட்டம் பெரும் மாணவர்கள் நூற்றில் ஒருவர் தான் ‘கட்டிடக்கலைஞர்களாக’ பயிற்சி செய்கிறார்கள்.  மற்றவர்கள் எல்லாம் தங்களின் அறத்தைக் கல்லூரி காலத்திலேயே அறிந்துகொண்டு, வெவ்வேறு துறைகளில் தாங்கள் கற்ற கல்வியை மக்களுக்காக, கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

“:…..காந்தி சொல்லறாரு …உடம்புல தீய கொளுத்திட்டுப் போய் நில்லுன சொன்னா நூறு பேர் வருவான்..ஆனா ஒரு கிராமத்தில போய் சேவை செய் என்று சொன்னால் ஒருத்தன் தான் வருவான்…”

எனக்குத் தெரிந்த அந்த ஒருவன் மஞ்சரி தான்.

மஞ்சரியின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

1 thought on “கட்டிடக்கலை எனும் சாக்கு”

  1. மோகன் பிரப தனபாலன்

    தங்கையின் கழல் பற்றி நன்றி சொல்கிறேன் மானுடத்திற்கான நீர் சேவைக்காக 🙇🏻

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top