ஆசிச் சொல்
இறப்பிற்காகக் காசியில் காத்திருந்து உயிர் துறந்த ஆன்மாக்களின் எனது தந்தை வழி பாட்டியும் ஒருவர். அதி காலையில் காலபைரவர் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகக், கங்கையில் நீராடுவதற்காகச் சென்று இருக்கிறார்கள். பனிமூட்டம் காரணமாகப் படித்துறை கண்களுக்குத் தெரியாமல்,உயரத்திலிருந்து, கால் தவறி கீழே விழுந்து அங்குள்ள ஒரு சிறு சிவன் கோவிலின் முன் கபாலம் உடைந்து மோட்சம் பெற்றார். என் பாட்டியின் கடைசி விருப்பம், ‘நான் அனாதையாகத் தான் போய்ச் சேர வேண்டும்’ என்பதுதான்.தனது தீராத மன வைராக்கியத்தால்